நவகிரகங்களில் மங்கள நாயகனாக திகழ்ப்பவர் குரு பகவான். ஞானம், படிப்பு, அறிவு, குழந்தை பாக்கியம், தொழில், திருமணம் இது போன்ற ஆற்றலை கொடுப்பவர். குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். செப்டம்பர் 19, 2025 அன்றிலிருந்து அக்டோபர் 17, 2025 வரை புனர்பூச நட்சத்திர மூன்றாம் கட்டத்தில் இருப்பார். இதனால் நான்கு ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் உள்ளன.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், நீண்ட நாட்களாக துணைவியுடன் கழிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு துணைவியுடன் நேரம் கழிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது, தொழிலில் வளர்ச்சி உண்டாகும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும், திடீர் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, வாழ்க்கையில் வெற்றி நிச்சயம், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து அமைதி நிலவும், வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும், தொழிலில் அதிர்ஷ்டம் பெருகிடும், உங்கள் வேலையைப் பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும், பதவி உயர்வு கிடைக்கும், மேலதிகாரிகளிடமிருந்து நல்லப்பெயர் கிடைக்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து நன்மை உண்டாகும், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது, காதலிப்பவருக்கு திருமணம் கைகூடும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பண ஆதாயங்கள் கிடைக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வருமானம் தேடி வரும், வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் வந்து சேரும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு, தொழில் செய்போருக்கு தொழிலில் வளர்ச்சி இருக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், துணைவியுடன் நிறைய நேரங்களை செலவிடுவீர்கள், வணிகத்தில் இருப்பவர்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
