கல்லூரி பேருந்தை தவறவிட்ட பெண்… அடுத்த ஸ்டாப்பில் பிடிக்க முயற்சித்தபோது நடந்த சம்பவம்… பகீர் கிளப்பும் பின்னணி…!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

கோயம்புத்தூர், சூலூர் அருகே செஞ்சேரிமலை மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் இலக்கியா, சகோதரன்  சரண். அவிநாசி பாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இலக்கியா படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு கல்லூரி பேருந்தில் செல்வது வழக்கம். இலக்கியா கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்கு முன்பே பேருந்து கிளம்பி விட்டது. அதனால் தவறவிட்ட பேருந்தை பிடிப்பதற்கு சகோதரன் இலக்கியாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.

பேருந்துக்கு பின்னே சென்றுக் கொண்டிருந்த சரண் பேருந்தை முந்தநினைத்து வேகமாக சென்ற போது எதிர்ப்புறம் வந்த கொண்டிருந்த கார் மீது மோதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் வேகமாகச் சென்று விட்டது. சாலையில் இருந்த மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண் மற்றும் இலக்கியாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் உரிமையாளரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.