கான்பூரின் ஷியாம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பி.பி.ஏ மாணவி வைஷ்ணவி (21). கல்லூரி முடிந்து நடந்து வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தெரு நாய்கள் மாணவியை இழுத்தே தரையில் தள்ளி முகம் மற்றும் உடல்களில் ஆழமாக கடித்து உள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் வந்து நாயை விரட்டி மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தெரு நாய் தாக்கியதில் கண்ணம் மற்றும் மூக்கில் மட்டும் 17 தையல் போட்டு உள்ளதாம். மாணவியின் பெற்றோர் அரசு உடனடியாக தெருநாய் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீதியில் ஆபத்தான நாய்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பை இல்லை எனவும் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் அது வசித்து வந்த இடத்திலேயே விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டிருந்தது. ஆக்ரோஷமான மற்றும் வெறிப்பிடித்த நாய்களை மட்டும் முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது. தெரு நாய்களுக்கு உணவு அளிக்க பீடிங் ஜோன்களை அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த நடவடிக்கையை நடைமுறைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இத்திட்டத்தை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
