தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 17 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கடந்த 1989இல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த 26 தொகுதிகள் எவை இரண்டாவது இடத்திற்கு வந்த தொகுதிகள் எவை என்று கண்டறிந்து அவற்றோடு தற்போதைய 17 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 100 தொகுதிகளை அடையாளம் காணும் பணியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழக தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தூதுவந்துள்ளதாக கூறப்படுகிறது. 70 தொகுதிகள் துணை முதல்வர் ஆட்சியில் பங்குதர தயாராக இருப்பதாக புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவர் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் பேசப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் மேலிடமும் திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதால் இப்போதைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால் தேர்தல் நெருக்கத்தில் தொகுதி பங்கீட்டின் போது காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுகவில் கொடுக்க முடியாமல் போகலாம் .அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைமை மாற்று கூட்டணிக்கு யோசிக்கும்போது TVK கூட்டணிக்கு தான் காங்கிரஸ் வந்தாக வேண்டும். அதுவரை பொறுமையாக தான் எதையும் அணுக வேண்டும் என்றும், அதுவரை இரு கட்சியினரும் தொடர்பிலேயே இருக்கலாம் என்றும் TVK தரப்புக்கு காங்கிரஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால் தான் மதுரை மாநாட்டில் திமுக, பாஜக, அதிமுகவை சரமாரியாக விமர்சித்த விஜய் காங்கிரஸ் குறித்து வாய் திறக்காமல் பேச்சை முடித்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
