அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு பெரிய எச்சரிக்கை வெளியிட்டது. அதில் இறக்குமதி செய்யப்பட்ட சில பாத்திரங்களில், ஈயம் அளவு அதிகமாக இருப்பதால், அதை விற்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வேண்டுதல் விடுத்தது. ஈயம் அளவு அதிகமாக உள்ள பாத்திரத்தில் சமைக்கும் போது, சிறு குழந்தைகள், இனப்பெருக்க வயதுடைய பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பெரும் பாதிப்படைகின்றனர்.
அலுமினியம், பித்தளை மற்றும் இண்டோலியம் போன்ற அலுமினிய உலோக கலவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கும் பொழுது, உணவு மாசுபட்டு, பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என FDA மற்றும் அதன் மாநில கூட்டாளிகள் கண்டறிந்தனர். இதுபோல் பாத்திரங்கள் ஏதேனும் வீட்டில் இருந்தால், அதை உடனடியாக தூக்கி எறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உடலில் ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக யாரேனும் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சில்லற வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் விற்கும் சமையல் பாத்திரம் அனைத்தும், FDA விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறான சமையல் பாத்திரங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால், கடுமையான உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
