திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
