தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றன. விழுப்புரம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சட்டசபை தேர்தலுக்காக சீமான் தலைமையில் செஞ்சிக்கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பார்த்த சீமான் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். சலசலப்பிற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் இல்லை என்று விமர்சித்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேடையிலிருந்து ஆவேசமாக இறங்கிய சீமான் அக்கூட்டத்தில் ஒருத்தரை அடிச்சாரு இதை யாரெல்லாம் கவனித்தீர்கள். சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நாங்கள் இல்லை என்று கூறினாரே, அதற்கு என்ன அர்த்தம்.
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சீமானை அழைத்தார்கள். ஆனால் அவரோ பயந்து ஓடிப்போய் சுப்ரீம் கோட்டில் தடை வாங்கினார். பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் பதுங்கிக் கொண்டிருந்தார். முதல்வர் எனது அண்ணன் தயாளு என்னுடைய அம்மா இன்று உறவு கொண்டாடி வருகிறார். அவர்கள் யாரும் இவரை தம்பி என்று உறவு கொண்டாட வில்லை. எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று வீர வசனம் எல்லாம் பேசுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் பதுங்கி ஒழிந்திருந்ததற்கு என்ன அர்த்தம் என்று விஜயலட்சுமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார் .
