தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைமை பொறுப்புக்காக மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பதில் முரண்பாடு நிலவிய நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தற்போது ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகின்றார். ஆனால் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி இபிஎஸ் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
