திடீர் திருப்பம்… அதிமுகவில் மீண்டும் சசிகலா.. அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பாஜக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று கூறிக்கொண்டு இருக்க அதிமுக மற்றும் பாஜக இடையே சற்று மோதல் போக்கு நிலவி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் திமுகவிற்கு தாவி வருகின்றனர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டியளித்த சசிகலா, அதிமுக ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு தனியாருக்கு டெண்டர் விட்டது தவறு என்றார். இந்த விவகாரத்தில் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சசிகலா அதிமுக விவகாரத்தில் மூக்கை நுழைப்பது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் பலவீனமாக உள்ள அதிமுகவை பலமாக மாற்றும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் உள்ள சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என கூறினார். இதனால் மீண்டும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா முனைப்பு காட்டுவதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.