பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கம்பம் மீனா. இந்த சீரியலுக்கு முன்பாக பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ பாக்கியலட்சுமி சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பானது. வழக்கமான ஒரு சீரியல் போல அல்லாமல் குடும்பப் பெண்கள் அனைவரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகின்றனர் என்பதை கருவாக கொண்டு சுமார் ஆறு வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் செல்வி என்ற துணை கதாபாத்திரத்தில் தன்னுடைய மகனை படிக்க வைத்து பாக்கியாவின் பொன்னான இனியாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவருடைய செல்வி கதாபாத்திரம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்தது. இப்படியான நிலையில் கம்பம் மீனா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்து வந்த பல விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். அதில், என்னுடைய அப்பா இறந்துவிட்டார். என்னுடைய அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார்.
15 வயதிலேயே என்னுடைய மாமன் மகனை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமா எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றினேன் . பணியின் போது சுற்று வட்டாரத்தில் என்னை தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமாக இருந்தேன். பிறகு நடிப்பில் ஒரு ஆர்வம் இருந்தது. மகன்களை படிக்க அனுப்பி விட்டு நடிக்க வாய்ப்பு தேடி வந்து விட்டேன். என்னுடைய திருமண வாழ்க்கை இப்படி போனதால் அதனை நினைத்து என்னுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். 2009 ஆம் ஆண்டு சீரியலில் நான் நடிக்க வந்தேன். எனக்கும் சினிமாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.
என்னுடைய ஒரே லட்சியம் என்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது நல்ல நிலைமைக்கு வளர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தான். அதற்காகவே வெறித்தனமாக உழைத்தேன். விடுதியில் தங்கிய மகன்கள் படித்தனர். அவர்களுக்கு அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுத்துள்ளேன். இருவருமே என்னை புரிந்து கொண்டு எனக்கு பலமாக இருக்கின்றன. அவர்களுக்கு நான் உண்மையாக இருந்தால் போதுமாக இருக்கும். சினிமாவில் இதுவரை சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இனியும் தொடர்ந்து சினிமாவில் பயணிப்பேன் என்று கம்பம் மீனா உருக்கமாக பேசியுள்ளார்.
