மொத்தமாக வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… சிறுவன் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்…!

By Srimathi on ஆவணி 16, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன், மனைவி கஸ்தூரி.
ஐயப்பன், சிட்டி மார்க்கெட் இல் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியர், ஸ்ரீராம் காலனியில் முதல் தளத்தில் ஓர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
வழக்கம்போல் ஐயப்பன் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில், கஸ்தூரி வீட்டில் இருந்த மர்ம பொருள், வெடிகுண்டு வெடித்தது போல் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. கஸ்தூரி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும், உடைந்து நொறுங்கின. மேலும் கஸ்தூரி வீட்டை சுற்றியுள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, பொருட்கள் நொறுங்கி, அங்கு வசித்தவர்களும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

மேலும் ஆடுகோடி போலீசார் தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்து, இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம வெடி பொருள் வெடித்து சிதறியதால், வெடிகுண்டு நிபுணர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தடை அறிவியல் நிபுணர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கஸ்தூரி, சரசம்மா, சிறுவன் முபாரக் உள்பட 11 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இதில் முபாரக் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

   

இந்தச் சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத்,
“கேஸ் சிலிண்டர், வெடித்து சிதறியிருக்கவே அதிக வாய்ப்புள்ளது. வெடிப் பொருளுக்குகானத் தடையம் எதுவும் நடத்திய சோதனையில் கிடைக்கவில்லை. மேலும் சில துணிகள், படுக்கைகள், எரிந்து நாசம் ஆகின, இரு பெண்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். கஸ்தூரியின் வீட்டில் இருந்த சிலிண்டர், கள்ளச் சந்தையில் வாங்கப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது. வீடுகளின் நடு மத்தியில், முதல் தளத்தில், கஸ்தூரியின் வீடு இருந்ததால் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள 9 சிலிண்டர்கள் வெடித்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நிபுணர்கள் ஆய்வை மேற்கொண்டு வருவதால், ஆய்விற்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.