நாமக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்களுடைய கடன் பிரச்சினை தீர்ப்பதற்காக புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ கதிரவன் என்பவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சுற்றுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் மண்நச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மக்களோடு எம்எல்ஏ நிகழ்ச்சிக்காக திருப்பட்டூர் பகுதிக்கு சென்ற போது, திமுக நிர்வாகி ஒருவர் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த அவர், எப்பொழுது காசு கம்மியாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம் என்று ஜாலியாக பேச தொடங்கியுள்ளார்.
கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் ஐந்து டாக்டர்கள் இருக்க வேண்டும். ஒரு அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் கட்டணம் ஆகும். எனக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கிடைக்கும். என் அப்பாவின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 14 கோடி. நாங்கள் செய்த மொத்த அறுவை சிகிச்சை 252.
எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு ரெண்டு லட்சம் ரூபாய் தான் கிடைக்கும் என்றால் நான் எப்போது rolls-royce காரை வாங்குவது திருப்பட்டூர் ஊரில் உள்ள அனைவரும் கிட்னியை கழட்டினால் தான் வாங்க முடியும். எனக்கு என்ன ஒரே வருத்தம் என்றால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 252 உயிரை காப்பாற்றி இருக்கிறேன். சொல்லப்போனால் கிட்னி அறுவை சிகிச்சை 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
