சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது வெடிகுண்டு வெடிக்கும் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த நிலையில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து உடனடியாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்துள்ளனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரத்தியில் மது போதையில் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இருந்தாலும் நாளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கொடியேற்ற உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
