தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிசைகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் பயன் பெறும் நோக்கில் தமிழக அரசால் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” கொண்டு வரப்பட்டது. மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இதில் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம். இதற்கு முக்கிய ஆவணங்கள் தேவை. இந்நிலையில் மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோரிடம் குடும்ப அட்டை, வருவாய் சான்றிதழ் இல்லையென்றாலும் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இலவச சிகிச்சை பெற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 108 மனநல மையங்களில் உள்ள 5944 பேரை காப்பீடு திட்டத்தில் இணைத்து சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
