அருமையான யோசனை… 20 மகளிருக்கு “கூலி” இலவச டிக்கெட் வழங்கிய தொண்டு நிறுவனம்… காரணத்தை கேட்டா ஆச்சர்யப்படுவீங்க..!!

By Soundarya on ஆவணி 13, 2025

Spread the love

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹெல்மெட்  அணிந்து வாகனம் ஓட்டி சென்ற 20 மகளிருக்கு கூலி படத்துக்கான டிக்கெட் இலவசமாக தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது. 20 பெண்களுக்கும் தலா நான்கு டிக்கெட்டுகள் வீதம் 80டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா,  சௌபின் சாஹிர், சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் நாளை வெளியாகிறது.  நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக்காட்சி நள்ளிரவு 2:00 மணி முடியும் வகையில் ஐந்து காட்சிகளை திரையிடலாம் என்று அனுமதி அளித்துள்ளது.