அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் தி.மு.கவில் இணைந்து விட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவை: அ.தி.மு.க வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன, சில நபர்கள் கட்சிகளை கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஒருவேளை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அதில் பாஜக பங்கு இருக்கும். மத்திய அரசு தலையிடு எந்த அளவிற்கு இருக்கும் என்று எல்லாம் யோசிப்பார்கள். டெல்லியில் என்ன சொல்கிறார்களோ அதை தான் அ.தி.மு.க செய்யும்.
தொடர்ந்து ஏன் கட்சி மாறிட்டீங்கன்னு நீங்க கேக்குறதுக்கு பதில் , ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்கு மாறி இருக்கேன். காரணம் அங்கு நிர்வாகம் சரியில்ல, சந்தோஷம் இல்ல, நிம்மதி இல்ல , பிரச்சனைகள் தான் அதிகமா வருது . எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போலவே பழனிச்சாமியும் பெரிய தலைவர் என்று நினைத்துக் கொள்கிறார் போல. கூட்டணியை அறிவித்தது அமைச்சர் அமித்ஷா தான், கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் குறைந்தப் பட்ச செயல்திட்டம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். குறைந்தபட்சம் என்றால் கல்வித் திட்டத்திலா , தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கு பதிலா இதில் எதில் பாரபட்சம் காட்டுவது. எந்த வகையில் ஒருமித்த கருத்து வரப்போகிறது என்று தெளிவாகக் கூற வேண்டும். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்று மைத்துனர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
