போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிட்டத்தட்ட ஒன்பது வருட டேட்டிங்கிற்குப் பிறகு தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுடனான திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். ரோட்ரிக்ஸ் தனது நிச்சயதார்த்த மோதிரத்தின் படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்பானிஷ் மொழியில், ‘ஆம், நான் நினைக்கிறேன். என் எல்லா வாழ்க்கையிலும்’ என்று எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ரோட்ரிக்ஸ் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியான நிலையில் ரொனால்டோ நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா என்ற வதந்திகளைத் தூண்டியது.
இந்நிலையில் காதலி ஜார்ஜினாவின் சமீபத்திய சமூக வலைதள பதிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2016 முதல் டேட்டிங் செய்து வரும் இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
