தமிழ்நாட்டில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேஷன் பொருட்களை தரும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” 12ஆம் தேதியான இன்று முதல் தொடங்கப்படுகிறது . சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு அன்று 16 , 73, 333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 20.41 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
