அலைபாயுதே பட பாணியில் நடந்த ரகசிய திருமணம்… கர்ப்பமான கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

சேலத்தை சேர்ந்த மாணவி (21), ஊட்டியில் தன் பி.எஸ்.சி பட்டப்படிப்பை படித்தார். அவரோடு படித்த மாணவர் ஒருவரை காதலித்து, 3 ஆண்டுகளாக ஊட்டியில் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். மேலும் அலைபாயுதே பட பாணியில்,  ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் உல்லாச உறவினால் அந்த மாணவி கர்ப்பமானார்.

சிசுவை வயிற்றில் சுமந்தபடி,சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டார். அந்த மாணவியின் காதல் கணவரும், டி.என்.பி.எஸ்.சி  குரூப் 1 பரீட்சை தேர்வு எழுதுவதற்காக சைதாப்பேட்டையில் தங்கி இருந்தார். மாணவி தங்கி இருந்த விடுதியில், உடன் தங்கி இருந்த சக மாணவிகள், அவரின் வயிறு பெரிதாவதை கண்டு கேள்வி எழுப்பினர். வயிற்றில் கட்டி வளர்வதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாணவி பதிலளித்தார். நேற்று முன்தினம் சக மாணவிகள் அவர்களது ஊருக்கு சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, அழகான ஆண் குழந்தை பிறந்தது.

   

குழந்தை பெற்ற வலியை விட, விஷயம் ஊருக்கு தெரிந்தால், பெரிய அவமானம் ஏற்படும் என்று பயந்த மாணவி, தன் காதலனுக்கு தகவல் கொடுத்தார். காதலனும் விரைந்து வந்து மாணவியும், குழந்தையும், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்க வைத்தார்.  இருவரும் யோசித்து அந்தக் குழந்தையை ஒரு கட்டை பையில் போட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தூக்கிப்போட்டு விட்டு தப்பி ஓட பார்த்தனர். அங்கு காவல் பணியில் இருந்த போலீஸ்கார் ஒருவர், அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்த பொழுது, அனாதையாக குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்ததாக பொய் பேசினார். ஆனால் போலீஸ்காரரின் கிடுக்குபிடி விசாரணையில், அவர்கள் இருவரும் நடந்த உண்மையை ஒப்புக்கொண்டனர்.

   

பின் அந்தக் குழந்தை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாணவியை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.பின் அவர் காதலனை, கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, இந்த பிரச்சனைக்கு முடிவு எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர்.