VIDEO: டோல்கேட்டிற்குள் திடீரென புகுந்த காட்டு யானை… காரின் கண்ணாடியை உடைத்ததால்… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

டேராடூன்- ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் திடீரென்று காட்டு யானை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் திடீரென்று காட்டு யானை ஒன்று சுங்கச்சாவடி அருகே வந்துள்ளது. முதலில் அது சுங்கு சாவடிக்கு பக்கத்தில் சென்று தன்னுடைய பலத்தால் விஐபி பாதையில் இருந்த தடையை உடைத்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் பயந்து போனார்கள். அதன்பின்னர் நான்கு பயணிகளை ஏற்றி சென்ற கார் யானை முன்பே செல்ல முயன்ற போது யானை ஆக்ரோஷமாக தும்பிக்கையால் அந்த காரை தள்ளியுள்ளது.

இதனால் காரின் பின்புற கண்ணாடி முழுவதுமாக உடைந்துள்ளது. இதனால் காரில் அமர்ந்திருந்த பயணிகள் அந்த நேரத்தில் பயந்து நடுங்கி உள்ளார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. அதன் பிறகு ஆக்ரோஷத்தை இழந்த யானை அமைதியடைந்து மெதுவாக காட்டிற்கு சென்றுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுவாக இந்த பகுதியை சுற்றியுள்ள காடுகளில் யானைகள் அடிக்கடி காணப்படுகின்றன. ஆனால் அவை சுங்கச்சாவடிக்கு வந்து வாகனங்களுக்கு மிக அருகில் செல்வது மிகவும் அசாதரமானது என்று  உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.