திருவிழாவில் ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி துடிதுடித்து பலி… மொத்த ஊரே சோகத்தில் ஆழ்ந்த சம்பவம்…!

By Nanthini on ஆவணி 10, 2025

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஸ்பீக்கர் விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோரை குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்று உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு மைக் செட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்தன.

இந்நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய அளவிலான ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சுகவதி என்ற சிறுமி கயிற்றை அவிழ்த்ததால் குழந்தையின் மீது ஸ்பீக்கர் விழுந்து உள்ளது. இதில் சிறுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்பீக்கர் விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.