கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில்நிலையத்திலிருந்து, 64 வயது பெண் தனது சகோதரருடன் மகாராஷ்டிரத்தின் பன்வேவிலிருந்து திருச்சூர் நோக்கி பயணித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், புறப்பட்ட ரயிலின் கதவு அருகில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மர்ம நபர் ஒருவர், பெண்ணிடம் இருந்து பையை பறிக்க முயன்று பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின் அந்த மர்ம நபரும் கீழே குறித்து, பெண்ணிடம் உள்ள ரூ.8,000-க்கும் மேற்பட்ட பணத்தையும், மொபைல் ஃபோனையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால், பெண்ணின் தலையில் லேசான காயம் ஏற்பட்டு, கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் குறித்து பெண்ணிடம் விசாரிக்கையில், அந்த நபர் திடீரென வந்து, பையைப் பறிக்க முயன்றார். நான் தரவில்லை. அதனால் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தப்பி ஓடினார். பின் ரயிலில் இருந்த பயணிகள், சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர், என்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தப்பியோடிய மர்ம நபரை, கண்டுபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
