பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடை குறைப்பது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். மற்ற விஷயங்களுடன் ஒப்பிடும்போது உடல் எடையால் பல அவமானங்களை சந்தித்தவர்கள் ஏராளம். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு பல உடற்பயிற்சிகளை நாம் மேற்கொண்டாலும் சரியான உணவு கட்டுப்பாடு என்பதும் முக்கியமாகும். உடல் எடையை குறைப்பது எளிதான விஷயம்தான். ஆனால் அதனை எவ்வளவு சாதாரணமாக செய்துவிட முடியாது.
தெளிவான திட்டம், தொடர்ச்சியான செயல்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை இருந்தால் மட்டும்தான் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் சுமார் 160 கிலோ எடையுடன் இருந்த பிரசன்னா என்ற நபர் பல அவமானங்களை சந்தித்துள்ளார். மருத்துவமனையிலும் இதற்கான சிகிச்சைகளை அவர் பெற்ற நிலையில் தான் பெற்ற அவமானங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் சுமார் இரண்டு வருடமாக கடுமையான உடற்பயிற்சி மற்றும் பல போராட்டங்களுக்குப் பிறகு 100 கிலோ எடையை குறைத்து தற்போது 60 கிலோ உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
