தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும், எப்படியாவது விட்ட ஆட்சியை எட்டி பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் போராடி வருகிறது. இந்நிலையில் அதிமுக இரண்டு பிரிவுகளாக இருந்தாலும் திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க EPS திட்டம் போடுகிறார்.
இதனால் வலிமையான கூட்டணி அமைக்க பல கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த EPS, “இதுவரை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கட்சியின் கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், EPS எந்த கட்சிகளையும் நாங்கள் அழைக்கவில்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
