சுதந்திர தின சிறப்பு ரயில்கள்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் குட் நியூஸ்…!

By Srimathi on ஆவணி 7, 2025

Spread the love

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் வசதி வசதிக்காக, நான்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னனை சென்ட்ரல் -போத்தனூர் 

   

வருகிற 14-ஆம் தேதி, இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்த புறப்படும் ரயில்(06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். பின் 17ஆம் தேதி, இரவு 11:30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில்(06028) மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.

   

மங்களூர்-திருவனந்தபுரம்

 

வருகிற 14, 16ஆம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூரில் இருந்த புறப்படும் சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது.பின் 15, 17 ஆம் ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06042) மறுநாள் காலை6.30 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது.

நாகர்கோவில் -தாம்பரம் 

வரும் 17ஆம் தேதி, இரவு 11 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (06012) மறுநாள் காலை 10:55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.பின் 18 ஆம் தேதி, மதியம் 3.30 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06011) மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

சென்னை எழும்பூர் -செங்கோட்டை 

வருகிற 14-ஆம் தேதி, இரவு 9:55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089) மறுநாள் காலை 11 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. பின் 17ஆம் தேதி இரவு 7:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (8.8.2025) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இச் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.