தமிழ்நாட்டில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேஷன் பொருட்களை தரும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது .முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு அன்று 16 , 73, 333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
