இப்போதெல்லாம் சினிமாவில் கேங்ஸ்டர் , வன்முறை, சைக்கோ படங்கள் இது போன்ற திரைப்படங்களே அதிக அளவில் வருகின்றன . பழிக்குப் பழி என்றும் பல படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இதேபோல் சென்னையில் சினிமாவை மிஞ்சிய பழிவாங்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் புல்கான் ராஜ்குமார் [42]. ரவுடியாக இருந்த ஈவர் இப்போது ரவுடி தொழிலை விட்டுவிட்டு அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு தவறான செயல் இன்று அவர் உயிரையே எடுத்து விட்டது.
17 வருடத்திற்கு முன்பு ரவுடியாக இருந்தபோது கொலை செய்த ஒருவரின் மகன் இப்பொழுது பழிவாங்கும் குணத்தோடு காத்திருந்து ராஜ்குமாரின் வீட்டிற்குள் புகுந்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். என் குழந்தைகளுக்காக என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கதறியும் விடாமல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்று விட்டனர் . இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன விசாரணையில் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செந்தில் மகன் தந்தை கொலைக்காக 17 வருடங்களாக காத்திருந்து பழி வாங்கியது தெரியவந்துள்ளது. ரவுடி செந்திலின் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கனவே முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இறந்து விட்டனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மற்றொருவர் ராஜ்குமார் இப்போ உயிருடன் இல்லை .
கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் , யுவனேசை பார்க்கும் போதெல்லாம் உன் அப்பனை நான் தான்டா கொன்னேன் என்று கெத்து காட்டி வந்துள்ளார். இதுவே இன்று அவர் உயிர் போவதற்கு காரணமாகிவிட்டது. அதனால் யுவனேஷ் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். 17 வருடங்களாக நேரம் பார்த்து தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்து விட்டார் யுவனேஷ் . இதில் யுவனேஷ் மற்றும் இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றன.
