PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மொபைல் போன் மூலம் ஈஸியா வேலையை முடிக்கலாம்… இதோ முழு விவரம்…!

By Divyamayakannan on ஆவணி 7, 2025

Spread the love

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்காக புதிய வழிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. UAN எண்ணை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பாக புதிய மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் அனைவரும் புதிய வழிமுறைகளை பயன்படுத்தி பிஎஃப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஜூலை 30ஆம்  தேதி  விதிமுறைகளை மாற்றுவதாக தகவல் வெளியானது. அந்த அறிவிப்பு பிஎஃப் திட்டத்தின் தொடர்புடைய அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் புதிய விதியின்படி பிஎஃப் தொடர்புடைய அனைத்து உறுப்பினர்களும் UAN எண்ணை உருவாக்கும் செயல்முறை மாற்றி உள்ளது.

இதன்படி ஆதார் அட்டையில் உள்ள முக அங்கீகாரத்தை வைத்து UAN எண்ணை உபயோகிக்கும் முறையை உருவாகியுள்ளது. மேலும் பிஎஃப்  உரிமையாளர்கள் உமாங் செயலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர்களுக்காக, முதலாளிகளாலே UAN கணக்கை உருவாக்கும் பழைய  முறை செயல்பாட்டில் இருந்தாலும் புதிய விதிமுறைகளே இனி செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. UAN எண்களும் ஆதார் முக அங்கீகாரம் போலவே உருவாக்கப்படும். அதன் முழு செயல்முறைகளும் உமாங் செயலில் மட்டுமே செயல்படுத்தப்படுமாம்.