வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள்… நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை…!

By Divyamayakannan on ஆவணி 6, 2025

Spread the love

சென்னை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்வி ஒத்துழைப்பு, இரட்டை பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குதல் விதிமுறைகள் 2022 ஆம் மற்றும் இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைதல் மற்றும் செயல்படுத்துதல் விதிமுறைகளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட்டு உள்ளது..

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் பல உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு படிப்புகளை வழங்குபவர்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாம். அந்த நிறுவனங்கள், கல்லூரிகள் சேர்ந்து மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்குவதை எளிதாக்கி தருகிறதாம் . இதை அடுத்து யு.ஜி.சி தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

   

சில தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன்  முறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ வழங்குவதாக செய்தி வந்துகொண்டு இருக்கிறது . செய்தித்தாள்களிலும் , சமூக ஊடங்களிலும், தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரங்கள் பரவி வருகிறது. இதில் நாம் தெரிந்து கொள்வது, இது போன்ற எந்த ஒரு ஒத்துழைப்பிலும் பல்கலைக்கழகம்  அங்கீகரிக்கப்படாத பட்டங்கள்              [ யு.ஜி.சி]யால்   ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்கிறோம்.

   

இது போன்ற தவறான முறையில் ஈடுபட்டால் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள், ஒழுங்கு முறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், பொதுமக்கள் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.