அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன் என்று அமைச்சர் துரை முருகன் விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பாமக தலைவர் அன்புமணி தன்னுடைய தந்தை ராமதாசை எதிர்த்து தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு அவருகிறார். இது குறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமை கிடையாது. நாம் சொல்லப்போவதும் இல்லை. ஆனால் இந்த நடை பயணத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது நான் அமைச்சராக இருந்த ஆட்சி பணிகள் குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
அதாவது இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் .அவரை நான் கேட்கிறேன் பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியது உண்டா? என்றுகேட்டு இருக்கிறார். அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நான் நினைத்திருந்தேன் .ஆனால் வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டில் இருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்துள்ளார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகிற பணியை ஆரம்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக நான் இந்த துறைக்கு அமைச்சராக இருந்தபோது, கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலும், ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும் பாலாறு, கன்னாற்றில், சின்னவேம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன். இந்த வருடம் அமுண்டி, வேப்பாலை ஆகிய இடங்களிலும் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அன்புமணிக்கு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன்பு யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளி விவரத்தோடு பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
