தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று கூட்டணியை பலமாக அமைத்துக் கொண்டு அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
இவர்களுக்கு நடுவே மக்களுக்கு ஒரு புதிய ஆட்சியை வணங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருந்தார். பிறகு இவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே அவரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க ஈபிஎஸ் அவர்களிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசித்திருந்தார். ஆனால் ஓபிஎஸ் தரப்பை இணைக்க கூடாது என்பதில் இபிஎஸ் விடாப்பிடியாக உள்ளார். இதனால் விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும் விரைவில் அறிவிப்பை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
