உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் ஹோட்டல் ஒன்றில் ஜூலை 31ம் தேதியன்று இரவு சுமார் 12 முதல் 13 பேர் கொண்ட குழு ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட வந்தார்கள் . அதில் சிலர் சைவ உணவுகளையும், மற்றவர்கள் அசைவ உணவுகளையும் ஆர்டர் செய்துள்ளார்கள். சாப்பிடும்போது ஒருவர் திடீரென்று கத்த தொடங்கியுள்ளார். அதாவது சைவ உணவில் எலும்புகள் கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து சர்ச்சை எழுந்தது. ஆரம்பத்தில் கோபத்தை தூண்டிய இந்த சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் வேண்டுமென்றே சாப்பாட்டில் எலும்பை போட்டுவிட்டு தங்கள் நிறுவனத்தை அவதூறு செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறி இருந்தார்.
இதனையடுத்து தற்போது இந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஹோட்டலில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அந்த குழுவில் இருந்த ஒரு நபர் அசைவ தட்டில் இருந்து ஒரு எலும்பை இன்னொருவருக்கு கொடுத்து பிறகு அதை ஒரு தட்டில் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் தங்களுடைய பெயருக்கு நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இது போன்ற திட்டமிட்ட சதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
