தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கடைகளுக்கு முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதியில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நான்கு நாட்கள் மாதாந்திர விடுமுறையாகும். அதன்படி முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமைகளிலும், அடுத்த இரண்டு வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறையாகும்.
அடுத்து ஆகஸ்ட் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 சனிக்கிழமை கோகுலாஷ்டமி, ஆகஸ்ட் 27 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது. இதனால் மொத்தம் ஆகஸ்ட் மாதத்தில் 7 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
