நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 19 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 20வது தவணை இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத் தொகை உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை நீங்களே எளிதில் சரி பார்க்கலாம். அதற்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் farmer corner என்பதில் benediciary status என்ற பக்கத்திற்குச் சென்று ஆதார் எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். இ கே ஒய் சி, நில சரிபார்ப்பு, ஆதார் மற்றும் வங்கி சீடிங் ஆகிய பகுதிகளில் yes என இருந்தால் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும். அடுத்த தவணையும் வழக்கம் போல உங்களுக்கு கிடைக்கும்.
