மனிதர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நிச்சயம் குளிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஈரான் நாட்டை சேர்ந்த அமோ ஹாஜி என்பவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து கொண்டிருந்தார். ஈரான் நாட்டின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த இவர், தன் சிறுவயதில் சில மன அழுத்தம் ஏற்பட்ட காரணத்தால் குளிக்காமல் இருந்ததாகவும், மேலும் குளித்தால் தனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்று அவர் அஞ்சினார் எனவும் கூறப்படுகிறது.
பின்னர் அப்பகுதி கிராம மக்கள் அவரை வற்புறுத்தி குளிக்க வைத்தனர் எனவும் , அதைத் தொடர்ந்து 9வது நாள் அவர் உயிர் பிரிந்தார் எனவும் கூறப்படுகிறது . 2013 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையைப் பற்றி ‘The Stranger Life of Amou Haji’ என்ற தலைப்பில் சிறு ஆவணம் ஒன்று ஈரானிய ஊடகங்களின் அறிக்கை படி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
