அமெரிக்காவைச் சேர்ந்தவர் டயானா மென்டானோ. 25 வயதான இவர் தன்னைவிட 51 வயது அதிகமான எட்கர் (76) என்பவரை காதலித்து வருகிறார். எட்கரின் முன்னாள் காதலி மூலமாக டயானா அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். பிறகு இருவரும் ஒரு வருடமாக டேட்டிங் செய்துள்ளார்கள். முதலில் எட்கர் காதலை சொல்லி நிலையில் டயானா அதை உடனே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த காதலை டயானா குடும்பத்தினர் மறுத்துள்ளார்கள். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரோடு பழகி வந்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இது குறித்து டயானா கூறுகையில், “வயது என்பது வெறும் எண் மட்டுமே. என்னை விட 51 வயது அதிகமானவரை திருமணம் செய்துள்ளேன். இதனால் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கோபம் அடைந்தாலும் அவர்கள் என்னுடைய உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் எனக்கு எல்லை இல்லா இன்பத்தை கொடுக்கிறார்” என்று கூறியுள்ளார்.
