விவசாயிகளே ரெடியா இருங்க..! இன்று உங்க வங்கிக்கணக்கில் பணம் வந்திரும்… வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 19 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆவது தவணை எப்போது வெளியிடப்படும் என்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.  இந்நிலையில் வாரணாசியில் இன்று பல கோடி மதிப்பிலான 52 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் பிரதான் மந்திரி கிஷான் பணத்தையும் வெளியிடுகிறார்.