சாவு இப்படி கூட வருமா?… பேசிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த டெலிவரி ஊழியர்… கலங்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on ஆவணி 2, 2025

Spread the love

சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிவரி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வரக்கூடிய டெலிவரி ஊழியர் தான் விகல் சிங். இவர் கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இப்படியான நிலையில் இவர் தன்னுடைய சக ஊழியருடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென சரிந்து கீழே விழுந்தார்.

அருகில் இருந்த ஊழியர்கள் உடனே பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டது. டெலிவரி ஊழியரின் உடலை கைப்பற்றிய போலீசார் பேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு ஊர் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இருந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.