அம்மாடியோவ்… 9 கல்யாணம் செய்த மோசடி ராணி… RBI அதிகாரிக்கும் காதல் வலை… பகீர் கிளப்பும் பின்னணி…!

By Nanthini on ஆவணி 2, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒன்பது ஆண்களை கல்யாணம் செய்த மோசடி பெண் சிக்கி உள்ளார். சமீரா பாத்திமா என்ற அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பெண், ஒன்பதாவது நபரை திருமணம் செய்ய முயற்சித்த போது போலீசில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்த அந்த பெண் வசதியான மற்றும் திருமணமான முஸ்லீம் ஆண்களை மட்டுமே குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளார். திருமண இணையதளங்கள் மற்றும் facebook மூலமாக தன்னுடைய இரைகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

தான் கணவனை இழந்தவர் என்றும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அவர் உருக்கமான கதைகளை சொல்லி அந்த ஆண்களின் அனுதாபத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். திருமணம் முடிந்ததும் தன்னுடைய கணவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெரிய அளவிலான பணத்தைப் பறித்துள்ளார். இப்படியான நிலையில் சமீரா பாத்திமாவின் முன்னாள் கணவர்களில் ஒருவர் அவரிடம் 50 லட்சம் மற்றும் மற்றொருவரிடம் இருந்து 15 லட்சம் என ரொக்கமாகவும் வங்கி பரிவர்த்தனைகள் மூலமும் பணம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

   

சமீரா ஒரு படித்த ஆசிரியை என்றும் இந்த மோசடி செயல்களை செய்ய ஒரு கும்பலுடன் சேர்ந்து அவர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை தன் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி கைது நடவடிக்கையில் இருந்து அவர் தப்பியுள்ளார். தற்போது நாகூரில் உள்ள ஒரு தேநீர் கடையில் தனது அடுத்த இலக்கை சந்திக்க முயற்சித்த போது சமீரா கைது செய்யப்பட்டார். இவரிடம் பாதிக்கப்பட்டவர்களில் RBI அதிகாரியும் ஒருவர் சிக்கி உள்ளார். தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.