தமிழக அரசின் புதிய அறிவிப்பு ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நகர்ப்புறங்களைப் போல இனி கிராமப்புறங்களிலும் தொழில் உரிமம் கட்டாயம் என்று அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கிராமப்புறங்களில் செயல்படக்கூடிய டீக்கடைகள் முதல் கல்யாண மண்டபம் வரை அனைத்திற்கும் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தொழில் நிறுவனங்களின் முதலீடு அடிப்படையில் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
