நாம் தினமும் காலையில் எழுந்ததும் டீ காபி குடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் தீமைகளை யாரும் உணர்வதில்லை. இப்படி தினமும் தவறாமல் டீ,காபி குடிப்பதற்கு பதிலாக உடலுக்கு நன்மை தரும் பானங்களை அருந்துவது சிறந்தது. அதன்படி ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அதனை குடிக்கலாம். அப்படி செய்தால் செரிமானத்திற்கு உதவும், உடல் சூட்டை தணிக்கும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
மலச்சிக்கலை தீர்க்கும். பெண்களுக்கு மாதவிடாய் வழியை போக்க உதவும். உடலில் அமிலத்தன்மையை சீராக்கும். வெந்தயம் எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் பருமனை விரைவாகக் குறைக்க முடியும். வெந்தயம் சூடாக இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதை உட்கொள்ள வேண்டும்.
