தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 28ஆம் தேதி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
