இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தக் கூடியவர்களில் பெரும்பாலானோர் youtube இல் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் youtube பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது youtube இல் shorts போடா இனி பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை.
Google VEO2 இன் உதவியுடன் போட்டோக்களை சிறு வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை youtube அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இந்த அம்சம் டெஸ்டிங்கில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது உலகம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
