இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான் பிரதான் மந்திரி கிஷான் மான் தன் யோஜனா. இந்தத் திட்டம் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு ஓய்வூதிய மூலம் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 60 வயது நிறைவடைந்ததும் குறைந்தபட்ச நிலையான ஓய்வூதிய மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். இந்த திட்டத்தில் பயனாளி 29 வயதுடைய சராசரி நுழைவு வயதில் மாதம் 100 ரூபாய் பங்களிப்பு செய்ய வேண்டும். மத்திய அரசும் ஓய்வூதிய நிதிக்கு சமமான தொகையை வழங்கும்.
மேலும் பதிவு செய்த விவசாயிகள் 60 வயது அடைந்ததும் குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியமாக மாதம் 3000 ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் பலன்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் கிடைக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் முதுமையில் குறைந்தபட்ச சேமிப்பு அல்லது வருமானம் இல்லாததால் அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக தான் மத்திய அரசை இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாதம் 55 முதல் 200 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். ஒருவேளை விவசாயம் மரணமடைந்தால் அவருடைய மனைவிக்கு 1500 ரூபாய் மாத டென்ஷன் ஆக கிடைக்கும்.
