தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்று இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் மீண்டும் இந்த முறை திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று ஸ்டாலின் பக்காவாக பிளான் போட்டு வருகின்றார். இவர்களுக்கு நடுவே தமிழகத்திற்கு ஒரு புதிய ஆட்சியை தர வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் வாய்ப்பு அளிக்காததால் அவர் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இப்படியான தகவல் பரவி வருகிறது. ஆனால் விஜயதாரணி இதை மறுத்துள்ளார். முன்னதாக காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் கசிந்த போதும் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் சில நாட்களிலேயே பாஜகவில் அவர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
