விஜய் கட்சியுடன் கூட்டணி?… அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்…!

By Nanthini on ஆடி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்று இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் மீண்டும் இந்த முறை திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று ஸ்டாலின் பக்காவாக பிளான் போட்டு வருகின்றார். இவர்களுக்கு நடுவே தமிழகத்திற்கு ஒரு புதிய ஆட்சியை தர வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

இப்படியான நிலையில் கேரளாவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும் இளைஞர் பட்டாளங்களின் ஆதரவுடன் விஜய் இருப்பதால் அவரை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தைக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்ட நிலையில் விஜய் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகின்றது.