தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் ரேஷன் கடைகளில் கார்டு தாரர்களுக்கு ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே பில் போடப்படுவதால் ஒருவருக்கு பொருள் வழங்குவதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகின்றது. இப்படியான நிலையில் எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவியை இணைப்பதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது ஒருவருக்கு பொருட்கள் வழங்கும் நேரம் பத்து நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்தச் செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
