தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மற்ற செயல்களிலும் மாணவர்கள் ஈடுபாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் பள்ளிகளில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை விளையாட்டு பாட வேலையை மற்ற பாட ஆசிரியர்கள் கடன் வாங்கி பயன்படுத்திக் கொள்வதுதான். இதனால் மாணவர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகிறது.
இப்படியான நிலையில் பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் P.E.T பாட வேலையை கடன் வாங்க கூடாது என்று துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு மூலமாகவும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
