வெட்கமே இல்லையா..? இப்படி திருடி சாப்பிடுறீங்களே..!. மேல் பெர்த்தில் அமர்ந்துகொண்டு ரயில் பயணி செய்த காரியம்… கைது செய்யக் கோரி வலியுறுத்தல்..!!

By Soundarya on ஆடி 23, 2025

Spread the love

ரயில் பயணத்தின் பொழுது மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த ஒருவர் அவ்வழியாக நடந்து சென்ற  ரயில் விற்பனையாளரிடம் இருந்து சமோசா மற்றும் பானங்களை திருடி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலின் மேல் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் விற்பனையாளரிடம் இருந்து வெட்கமே இல்லாமல் உணவை திருடுகிறார். .பணம் கொடுக்காமலோ அல்லது கேட்காமலோ அவர் நடந்து செல்லும் பொழுது அவர் தட்டுகளில் இருந்து சமோசாக்கள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.

   

அந்த நபர் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாமல் திருடி சாப்பிடுகிறார் .அதே நேரத்தில் மற்ற பயணிகள் இதை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. ஏழை விற்பனையாளரிடமிருந்து திருடுவது நகைச்சுவை என்று அவர் நினைக்கிறார். ஆனால் இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று  இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.