தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதானாலும் பிற நடிகர்களுக்கு மிகவும் சவால் கொடுக்கும் விதமாக இன்றும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறுகின்றார். ரசிகர்கள் மத்தியிலும் நீண்ட எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறுதியாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அளித்தது.
மறுபக்கம் இவருடைய நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி திமுகவின் உதவியுடன் எம்பி ஆகிவிட்டார். சமீபத்தில் கூட ரஜினியை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றிருந்தார். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டாரை மீண்டும் அரசியல் மேகம் சூழ்ந்துள்ளது. ரஜினியை கவர்னர் பதவி தேடி வந்ததாக அவரது அண்ணன் சத்ய நாராயண ராவ் கூறியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக கூறி பிறகு அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய ரஜினி அரசியல் வளையத்தில் சிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவரை கவர்னர் பதவி மூலம் இழுக்க பாஜக முயல்வதாக பலரும் கருத்துக்கூறி வருகிறார்கள்.
